ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை

அஷ்வினை முந்தி சாதனை படைத்தார் பும்ரா

துபாய்,, ஜன..2 ; பந்துவீச்சாளர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஷ்வினின் மதிப்பீட்டு புள்ளி சாதனையை முறியடித்து ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. அதில் பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 907 ‘ரேட்டிங்’ புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  அண்மையில் முடிவடைந்த மெல்போர்ன் டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்தார்.  இதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் அதிக ‘ரேட்டிங்’ புள்ளிகளைப் (907) பெற்ற இந்திய பவுலரானார் பும்ரா.

இதற்கு முன்பு, 2016, டிசம்பரில் வெளியான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 904 ‘ரேட்டிங்’ புள்ளிகள் பெற்று இருந்தார். கடந்த வாரம் வெளியான தரவரிசையில் பும்ரா இதனை சமன் செய்திருந்தார். தற்போது அதனையும் கடந்து பும்ரா சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் அதிக ‘ரேட்டிங்’ புள்ளிகள் பெற்ற பவுலர்களுக்கான பட்டியலில் 17ஆவது இடத்தை இங்கிலாந்தின் டெரெக் அண்டர்வுட் (907) உடன் பும்ரா பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் 4 இடங்களில் இங்கிலாந்தின் சிட்னி பார்ன்ஸ் (932), ஜார்ஜ் லோமன் (931), பாகிஸ்தானின் இம்ரான் கான் (922), இலங்கையின் முரளிதரன் (920) ஆகியோர் உள்ளனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x