மே.இ.தீவுகளின் ஸ்பின்னர் ஜோமல் வாரிகன் மாயாஜாலம்
அனில் கும்ப்ளே, முத்தையா முரளிதரனின் சாதனை முறியடிப்பு

முல்தான், ஜன.20; மேற்கிந்திய தீவுகளின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஜோமல் வாரிகன், முல்தான் மைதானத்தில் ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தானில் அனில் கும்ப்ளே, முத்தையா முரளிதரன் ஆகியோர் படைத்திருந்த சாதனையை முறியடித்தார். பாகிஸ்தான் மண்ணில், வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற வகையில், இந்தியாவின் அனில் கும்ப்ளே, இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரும் ஒரே இன்னிங்சில் தலா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி படைத்திருந்த சாதனையை ஜோமல் வாரிகன் தற்போது முறியடித்துள்ளார். அத்துடன் 1959ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும்ஜோமல் வாரிக்கன் வரலாற்றில் பதிவு செய்தார்.



