சூர்யகுமார் கேப்டன்; அக்சர் படேல் துணை கேப்டன்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; இந்திய அணி தேர்வு

மும்பை, ஜன. 12 ; இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அக்சர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வாரிய தேர்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. முகமது ஷமி ஓராண்டுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். 15 பேர் கொண்ட அணியில், ஹர்ஷித் ராணா இடம்பிடித்துள்ளார்.







