“ஆஸி., தொடரில் நீங்கள் என்ன செய்தீர்கள்?”
பயிற்சியாளர்களுக்கு கவாஸ்கர் காட்டமான கேள்வி

சிட்னி, ஜன.6; “இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க பயிற்சியாளர்கள் குழு என்ன செய்தது?” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணியை மீட்டெடுக்க கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவினர் என்ன செய்தனர் என கவாஸ்கர் வினவியுள்ளார். இதே குழு இந்திய அணிக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டுமா என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.







