சூரி எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கார்!

‘விடுதலை 2’ விழாவில் விஜய் சேதுபதி

விடுதலை 2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹேரிங்டன் சாலையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியின் பிரம்மாண்டமான அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாவுள்ள நிலையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகை பவானி ஸ்ரீ, “’விடுதலை2’ படம் மூலம் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பில் மகிழ்ச்சி. புதுமுகமான என்னை நம்பி தமிழரசி கதாபாத்திரம் கொடுத்த வெற்றி சாருக்கு நன்றி. ராஜா சாரின் இசையில் வரும் பாடலில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என மகிழ்ச்சி தெரிவித்தார்.

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் பேசும்போது, “இயக்குநர் வெற்றிமாறன் சாருக்கு என் முதல் நன்றி. எனக்கு இந்தப் படம் பெரிய வாய்ப்பு. இளையராஜா சார் இருக்கும் மேடையில் இருப்பதே எனக்கு பெருமை. என் வாழ்க்கையில் சில பேரை சந்தித்தற்காக கடவுளிடம் நன்றி சொல்வேன். அப்படியானவர்களில் விஜய்சேதுபதி சாரும் ஒருவர். சூரி அண்ணன் என் வாழ்வில் மிக நெருக்கமான ஒருவர்” என்று நெகிழ்ந்தார்.

நடிகர் சூரி, “ராஜா அய்யா இசையமைக்கும் படத்தில் நடித்திருப்பது என் பாக்கியம். விஜய்சேதுபதி சார், ராஜீவ் மேனன் சார், சேத்தன் சார், பவானி ஸ்ரீ, கென் கருணாஸ் என அனைவருடனும் நடித்திருப்பது மகிழ்ச்சி. கென் கருணாஸ் சூப்பராக ஆக்‌ஷன் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் எல்ரெட் சாருக்கு நன்றி. ’விடுதலை1’ படம் உங்களுக்குப் பிடித்தது போலவே, ’விடுதலை2’ படமும் உங்களுக்குப் பிடிக்கும். ‘விடுதலை’க்கு முன் ’விடுதலை’க்கு பின் சூரி என என் வாழ்க்கையை பிரிக்கலாம். முன்பு என் காமெடியைப் பார்த்து வாழ்த்தியவர்கள் இப்போது நல்ல நடிகனாக என்னைப் பாராட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வெற்றிமாறன் சார்தான்” என்று பேசினார்.

நடிகர் விஜய்சேதுபதி, “சூரி மாதிரியான பெரிய ஹீரோ அவரது படத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். கென் கருணாஸூக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சேத்தன் சாரின் நடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. ஜாக்கி சாரின் செட் காலத்தைக் கடந்து எங்களை கூட்டி சென்று அந்த காலத்தில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது. இசை மூலம் எனக்கு பேரானந்தம் கொடுத்த ராஜா சாருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார், “’விடுதலை’ பயணம் முடிவது கடினமாக உள்ளது. ஆனாலும், இந்தப் பயணத்திற்கு நன்றி. இந்தப் படத்தை முதலில் முடிவு செய்து வைத்திருந்தது வெற்றி சாரும் ராஜா சாரும் தான். அவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி எல்லோருக்கும் வாழ்த்துகள்.” என்று கூறினார்.

இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒருவர் நம்பும் விஷயத்தை மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். டிசம்பர், 2020 தான் படத்தை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. எட்டு நாள்தான் கால்ஷீட் என சேதுவை இந்தப் படத்திற்கு கூப்பிட்டேன். ஆனால் இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் சேது குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி. சூரியும் நிறைய நாட்கள் நடித்திருக்கிறார். இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா, “‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ராஜீவ் மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள். இதில் வேற மாதிரி வெற்றி மாறன் பயணம் செய்திருக்கிறார்.” என்றார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x