தனுஷ் நடிக்கும் இந்திப்படம்; ஏ.ஆர். ரஹ்மான் இசை?
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை, ஜன. 10 ; நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய இந்திப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக பேசப்படுகிறது. தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பிறகு அதே இயக்குநரின் ‘அட்ரங்கி ரே’ என்ற படத்திலும் நடித்தார். அதன் தொ டர்ச்சியாக, மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஸ்க் மேன்’ என்ற படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை மீட்டவிருப்பதாக கூறப்படுகிறது.







