நாடு கடத்தலுக்கு அதிக ராணுவ விமானங்கள்
சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் ட்ரம்ப் அரசு

வாஷிங்டன், ஜன.25; அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் குடியேறியவர்களை நாடுகடத்த அதிக ராணுவ விமானங்களை அனுப்ப, அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஜோ பைடன் ஆட்சிக்காலத்தின்போது தவிர்க்கப்பட்ட யுக்தியை, ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. நாடு கடத்தல் விமானங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர், ‘இது ட்ரம்பின் வலுவான, தெளிவான செய்தி’ எனக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு பாதுகாப்புத்துறை விமானங்களையும் நாடு கடத்தலுக்கு பயன்படுத்த ஆராய்ந்து வருவதாக மில்லர் கூறியுள்ளார்.



