சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 72 வயதாகும் சீதாராம் யெச்சூரி சுவாசப் பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தற்போது செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.



