‘மதகஜராஜா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு எதிரொலி

கிடப்பில் உள்ள படங்களை தூசி தட்டும் தயாரிப்பாளர்கள்

சென்னை, ஜன.21; மதகஜராஜா படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பின் எதிரொலியாக, கிடப்பில் போடப்பட்ட பல படங்களை தூசி தட்டி வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

மதகஜராஜா ‘வசூல் ராஜா..!’

பொங்கலுக்கு வெளியான படங்களில், தயாரித்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர் திரைகண்ட ‘மதகஜராஜா’ படம்தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியான இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு திரையுலகைச் சேர்ந்த பலரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. அதன் விளைவாக பல படங்களை தூசி தட்டி வெளியிடும் முடிவில் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர்.

தூசி தட்டப்படும் படங்கள்..!!

அதன்படி, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராகி வருகிறது. இதேபோன்று சந்தானம் நடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தையும் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

‘இடம் பொருள் ஏவல்’ படமும் ரிலீஸ்?

இதுதவிர, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்து 10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தையும் ரீலிஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.

தயாரிப்பாளர்களின் இம்முயற்சிகளுக்கு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று, திரையுலகினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x