கால்பந்து ஜாம்பவான் மார்செலோ ஓய்வு

ரியல் மேட்ரிட் அணிக்கு 16 ஆண்டுகள் விளையாடி வெற்றிகளை குவித்தவர்

மேட்ரிட், பிப்.07; ரியல் மேட்ரிட் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் மார்செலோ தொழில்முறை விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவர், எல்லா காலங்களிலும் மிகச்சிறந்த left defender ஆக கருதப்படுகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 36 வயதான மார்செலோ ஸ்பானிய கால்பந்து ஜாம்பவனான ரியல் மேட்ரிட் அணியில் 16 ஆண்டுகள் கழித்துள்ளார்.

உலகின் மிகச்சிறந்த left defender-களில் ஒருவர் மார்செலோ

மார்செலோ ஆறு முறை லா லிகா பட்டங்களையும் ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார்.

“18 வயதில் ரியல் மேட்ரிட் அணி என் வீட்டுக்கதவை தட்டியது; அப்போது நான் இங்கு வந்தேன்” என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில் மார்செலோ குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஒரு உண்மையான மேட்ரிலினோ” எனப்பெருமை

“இப்போது நான் ஒரு உண்மையான (Madrileno) ‘மேட்ரிலினோ’ என்று பெருமையுடன் சொல்ல முடியும்; என்ன ஒரு பயணம்; ரியல் மாட்ரிட் ஒரு தனித்துவமான கிளப்” என்றும் மார்செலோ கூறியுள்ளார்.

ரியல் மேட்ரிட் அணியில் மார்செலோ, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ஒரு வலுவான உறவைக் கொண்டிருந்தார்.

பல தருணங்களை நினைவுகூர்ந்து ரொனால்டோ பதிவு

மார்செலோவின் ஓய்வு தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரொனால்டோ, “என் சகோதரரே, என்ன ஒரு நம்பமுடியாத வாழ்க்கை! நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், அதில் பல ஆண்டுகளாக சாதனைகள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“ரியல் மேட்ரிட் மற்றும் உலக கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த இடதுபுற தடுப்பாட்டக்கார்களில் ஒருவரான அவரை நீண்ட நேரம் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது” என்று ரியல் மாட்ரிட் அணியின் தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x