ஐ.சி.சி தரவரிசை; ஸ்மிருதி மந்தனா 2ஆவது இடம்
முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை

டெல்லி, ஜன.21; ஐ.சி.சி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் 249 ரன்களைக் குவித்ததன் மூலம் அவர், முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை, மந்தனா தான். தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் முதலிடத்திலும், இலங்கையின் சாமரி அதபத்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் முறையே 15 மற்றும் 17ஆவது இடத்தில் உள்ளனர்.







