இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டி20 போட்டி
மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா, ஜன.22; இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு விளையாடாத முகமது ஷமி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராக இந்திய அணிக்கு உதவும் என நம்பப்படுகிறது. இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இதுவரை நடைபெற்றுள்ள 24 டி20 போட்டிகளில், இந்தியா 13 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வென்றுள்ளன.



