டெல்லியில், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?
தேர்தல் பரப்புரையில் ஆம் ஆத்மி கட்சி கேள்வி

டெல்லி, ஜன. 10 ; டெல்லி தேர்தலில், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று ஆம் ஆத்மி வினவியுள்ளது. பரப்புரையில் பேசிய முதலமைச்சர் அதிஷி, பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று டெல்லி மக்கள் கேட்பதாக தெரிவித்தார். தேர்தலில் ஆம் ஆத்மி வென்றால், கெஜ்ரிவால் தான் முதலமைச்சராவார் என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் அதிஷி கூறினார். கல்காஜி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் பாஜகவேட்பாளர் ரமேஷ் பிதுரி தான் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் எனவும் அதிஷி பேசினார்.







