“வக்ஃப் வாரியம் என்பது நில மாஃபியாக்களின் வாரியம்”
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சாடல்

லக்னோ, ஜன. 10 ; வக்ஃப் வாரியம் நில மாஃபியாக்களின் வாரியம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். ஆஜ்தக் தொலைக்காட்சி நடத்திய “மத மற்றும் தார்மீக கடமைகள்” என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, மகாகும்பமேளா நடக்கவிருக்கும் இடம் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான சொத்து என்ற குற்றச்சாட்டை நிராகரித்தார். சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, “முஸ்லீம் லீக் மனப்பான்மையுடன் இந்தியா இயங்காது” என்று யோகி ஆதித்யநாத் பதிலளித்தார்.



