“நீங்கள் ஒரு கேரம் பந்து வீசினீர்கள்”: பிரதமர் மோடி

அஷ்வினின் திடீர் ஓய்வு; மோடி உணர்ச்சிப்பூர்வ மடல்

டெல்லி: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினின் திடீர் ஓய்வு முடிவு குறித்து பிரதமர் மோடி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். “நீங்கள் ஒரு கேரம் பந்து வீசியுள்ளீர்கள்” என, அஷ்வினுக்கு எழுதியுள்ள மடலில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்திருப்பது, கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளார்.

அஷ்வினுக்கு மோடி இதயப்பூர்வ மடல்

அஷ்வினின் ஓய்வு முடித்து குறித்து அவருக்கு பிரதர் நரேந்திர மோடி உணர்ச்சிகரமான மடல் ஒன்றை எழுதியுள்ளார். விளையாட்டின் நீண்ட வடிவத்தில் நாட்டின் மிகப்பெரிய வெற்றியாளர்களில் ஒருவரான அஷ்வினுக்கு இதயப்பூர்வமான கடித்தை பகிர்ந்து கொள்வதாக, அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மடலில், கிரிக்கெட் விளையாட்டுக்கும், இந்திய நாட்டிற்கும் முன்மாதிரியான சேவைகளை ஆற்றியிருக்கும் அஷ்வினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நீங்கள் ஒரு (carrom)கேரம் பந்து வீசி உள்ளீர்கள்..” என்றும் கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஒருவராக உருவெடுத்தது முதல் தனிப்பட்ட தியாகங்கள் வரை, விளையாட்டுக்காகவும் தனது நாட்டிற்காகவும் அவர் செய்த அனைத்திற்கும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x