கான்ஸ்டாஸ் தோளில் கோலி இடித்த விவகாரம்
கோலிக்கு ஆதரவாக சுனில் கவாஸ்கர் கருத்து

சிட்னி, ஜன.7 ; ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டில் சாம் கான்ஸ்டாஸ் தோள்பட்டையில் விராட் கோலி இடித்தது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள கவாஸ்கர், கோபத்தை தூண்டினால் பதிலடி கொடுக்க இந்தியர்கள் வெட்கப்படுவதில்லை என்று கூறினார். ஆனால், இந்நிகழ்வில் ஆத்திரம் எதுவும் தூண்டப்படவில்லை என கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். அதேபோல் வீரர்களை ரசிகர்கள் பரிகாசம் செய்வதால் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், அது அவர்கள் தங்களைத் தாங்களே மகிழ்வித்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும் எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.







