கூட்ட நெரிசலில் சிறுவன் படுகாயம்
அல்லு அர்ஜூன் மருத்துவமனையில் நேரில் ஆறுதல்

புஷ்பா -2 திரைப்படம் வெளியான நாளில் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவனை நேரில் சந்தித்து நடிகர் அல்லு அர்ஜூன் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

கடந்த டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில், அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா -2 படம் வெளியானது. அந்த தியேட்டருக்கு படக்குழுவினருடன் நேரில் சென்று அல்லு அர்ஜூன் படத்தை கண்டுகளித்தார். அவரின் வருகையை அறிந்து பெருங்கூட்டம் திரண்டதால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜூன் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜை, அல்லு அர்ஜூன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது புஷ்பா -2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும் உடன் இருந்தார். அல்லு அர்ஜூன் வருகையை முன்னிட்டு மருத்துவமனை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக, கூட்ட நெரிசலில் பலியான பெண் குடும்பத்துக்கு புஷ்பா -2 படக்குழு ரூ.2 கோடி நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.








