ஸ்பானிஷ் கோப்பை; ஃபைனலில் ரியல் மேட்ரிட்
பட்டம் யாருக்கு என தீர்மானிக்க பார்சிலோனாவுடன் மோதல்

மேட்ரிட், ஜன.10 ; ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில், ரியல் மேட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மேட்ரிட், ரியல் மல்லார்கோ அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில், பரம எதிரியான பார்சிலோனாவை ரியல் மேட்ரிட் எதிர்கொள்கிறது. கடந்த அக்டோபரில் நடைபெற்ற லா லிகா தொடரில் பார்சிலோனாவிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக்கொள்ள ரியல் மேட்ரிட் அணிக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.







