மனைவி மிச்செலுக்கு ஒபாமா பிறந்தநாள் வாழ்த்து
விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் எக்ஸ் தளத்தில் பதிவு

வாஷிங்டன், ஜன.19; மணவிலக்கு வதந்திகளுக்கு மத்தியில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவி மிச்செலுக்கு 61ஆவது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் மேசையின் குறுக்கே கைகோர்த்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை ஒபாமா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என் உயிரின் அன்பான மனைவி மிச்செலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீங்கள் ஒவ்வொரு இடத்தையும் அரவணைப்பு, ஞானம், நகைச்சுவை மற்றும் கருணை ஆகியவற்றால் நிரப்புகிறீர்கள்” எனக் குறிப்பிட்டு ஒபாமா வாழ்த்தியுள்ளார்.







