ஈரானில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
கொலையாளியும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

தெஹ்ரான், ஜன.19; ஈரான் தலைநகர் தெஹ்ரானில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த அடையாளம் தெரியாத நபர், நீதிபதிகள் அலி ரசினி மற்றும் முகமது மொகிசே ஆகியோரை சுட்டுக்கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிய கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்றபோதிலும், இரு நீதிபதிகளும் 1980களில் இருந்த இஸ்லாமிய அரசின் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.



