சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் வங்கதேச இளைஞர்
இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் பெயரை மாற்றிக் கொண்டார்

மும்பை, ஜன.19; நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது ஷரிபுல் என்ற அந்த நபர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் தனது பெயரை விஜய்தாஸ் என மாற்றிக்கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சயிஃப் அலிகானின் வீட்டிற்குள் தாஸ் புகுந்ததாக போலீசார் கூறினர். சில மாதங்களுக்கு முன்னர் மும்பைக்கு வந்த தாஸ், வீட்டு பராமரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



