லிவர்பூல் அணிக்காக 50ஆவது கோலடித்தார், முகமது சலா
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி

ஐரோப்பா, ஜன.22; ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், லிவர்பூல் அணிக்காக முகமது சலா 50ஆவது கோலை அடித்துள்ளார். எகிப்து வீரரான அவர், லில்லி அணிக்கு எதிராக ஒரு கோலடித்து வெற்றியைத் தேடித்தந்ததுடன் லிவர்பூல் அணியை அடுத்து சுற்றுக்கு இட்டுச் சென்றுள்ளார். இதன் மூலம் லிவர்பூல் அணிக்காக 50 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை சலாவுக்கு கிடைத்துள்ளது. இந்த பருவத்தில் சாம்பியன்ஸ் கோப்பை லீக் சுற்றுகளில் 3 கோல்களையும் சேர்த்து 31 ஆட்டங்களில் 22 கோல்களை சலா அடித்துள்ளார்.







