அதிரடி வீரர் கிலியன் எம்பாப்பே ‘ஹாட்ரிக்’ கோல்

லா லிகா தொடரில் ரியல் மேட்ரிட் அணி ஆதிக்கம்

ஸ்பெயின், ஜன.26; லா லிகா கால்பந்து தொடரில், (Kylian Mbappe) கிலியன் எம்பாப்பே-வின் அதிரடி ஹாட்ரிக் கோலால் ரியல் மேட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வல்லடொலிட் அணியை வீழ்த்தியது.

நேற்று (ஜன.25) நடைபெற்ற இப்போட்டியில், தொடக்கம் முதலே ரியல் மேட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

எதிரணியை கதிகலங்க வைத்த கிலியன் எம்பாப்பே

பிரான்ஸின் (Paris Saint-Germain) பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியிலிருந்து மாறிய பிறகு தனது வளமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிய எம்பாப்பே, நேற்றைய தினம் எதிரணியினரை கதிகலங்க வைத்தார்.

அவர், அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்து, ரியல் மேட்ரிட் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். பதில் கோலடிக்க வல்லடொலிட் அணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்த பலனும் கிட்டவில்லை.

3ஆவது இடத்தில் பார்சிலோனா அணி 

இந்த வெற்றியின் மூலம் லா லிகா தொடரில் ரியல் மேட்ரிட் அணி 49 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. அட்லெடிகோ மேட்ரிட் அணி 45 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பார்சிலோனா அணி 39 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நேற்றைய ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் அணியிடம் தோற்ற வல்லடொலிட் அணி கடைசி இடத்தில் உள்ளது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x