அல் ஹிலால்-நெய்மார் ஒப்பந்தம் முறிவு
தாய்நாடான பிரேசிலின் சாண்டோஸ் அணிக்கு மாறுகிறார்

ரியாத், ஜன.28; கால்பந்து வீரர் நெய்மார், சௌதியின் அல் ஹிலால் அணி உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள அல் ஹிலால் நிர்வாகம், இரு தரப்பினரும் பரஸ்பரம் பிரிந்து செல்ல ஒப்புக்கொண்டதாகவும், நெய்மாரின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளது. நெய்மார், தனது தாய்நாடான பிரேசிலில் உள்ள சாண்டோஸ் அணிக்கு திரும்புகிறார். இதற்காக தனது சம்பளத்தில் கணிசமான பகுதியை அல் ஹிலால் உடனான ஒப்பந்தத்தில் இருந்து விட்டுக்கொடுக்கவுள்ளார்.



