இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
பேட் கம்மின்ஸ்-க்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்

சிட்னி, ஜன.9 ; இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பேட் கம்மின்ஸ்-க்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதாலும், கணுக்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.







