திபெத் நிலநடுக்கத்தால் 4,000 வீடுகள் தரைமட்டம்
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தொடர்கிறது

திபெத், ஜன. 9 ; திபெத்தில் நிலநடுக்கத்தால் 4,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டதால் நாடே துயரில் மூழ்கியுள்ளது. அங்கு இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 126 பேர் பலியாகிவிட்டனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 400 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 30,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.







