விடாமுயற்சி டீசர் வெளியானது

தல ரசிகர்கள் கொண்டாட்டம்

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ திரைப்படத்தை தொடர்ந்து, ‘விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

‘விடாமுயற்சி’யில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. கடந்த ஒரு வருடமாக இப்படத்தின் போஸ்டர்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வந்தன.

இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த வரவேற்புகளுக்கு இடையில் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் எல்லாமும், எல்லோரும், கைவிடும்போது உன்னை நம்பு…. என்ற வாசகம் இடம்பெற்று கலக்குகிறது. ‘விடாமுயற்சி’யின் மேக்கிங்கை பார்த்து ‘தல’ ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிரடியாக பரவி அதிக பார்வைகளை குவித்து வருகிறது. ‘விடாமுயற்சி’ வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x