2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் டிரம்ப்

 "டைம்" இதழ் மீண்டும் தேர்வு

2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டெனால்டு டிரம்ப்பை, “டைம்” இதழ் மீண்டும் தேர்வு செய்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் புகழ் பெற்ற பத்திரிகையான “டைம்” இதழ், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி, அந்தாண்டின் மிகச் சிறந்த மனிதரை தேர்ந்தெடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதில் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் இடம்பெறும் அதிகம் செல்வாக்கு மிக்க நபரை தேர்வு செய்வது “டைம்” இதழின் பாலிசி. அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டிசம்பர் மாதம் “டைம்” இதழின் அட்டை படத்தில் வெளியாகும்.

இதன்படி 2024ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பை “டைம்” இதழ் அண்மையில் நடத்தியது. இதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மீண்டும் அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதில் பல்வேறு தரப்பினரிடம் அதிக ஓட்டுக்கள் பெற்று முதலிடம் பிடித்து ‘டைம் இதழ் முகப்பில் இடம் பெற்றுள்ளார் அவர். கடந்த 2016-ம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலிலும் டொனால்டு டிரம்ப் இடம் பெற்றிருந்தார். அப்போதும் அமெரிக்க அதிபராக அவர் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “டைம்” இதழுக்கு நன்றி சொல்ல விரும்புவதாக கூறினார். நான் பலமுறை “டைம்” அட்டையில் வந்திருக்கிறேன். ஆனால் எத்தனை முறை என்பது தெரியவில்லை. ஆனால் அவற்றில் 25% அட்டைகளைப் பற்றி மட்டுமே தன்னால் சிறப்பாக பேச முடியும் என்று நகைத்தார். மேலும் டைம் இதழ் அளிக்கும் அட்டைப் படத்தின் கெளரவம் என்பது மிகுந்த மரியாதை மிகுந்தது எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x