முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் டைசன் பியூரி ஓய்வு
2 முறை ஹெவிவெயிட் பட்டம் உள்பட 36 வெற்றிகளை குவித்தவர்

பிரிட்டன், ஜன.14; முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியனான டைசன் ஃப்யூரி (Tyson Fury) குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான ப்யூரி, ஏப்ரல் 2022 இல் டில்லியன் வைட்டை (Dillian Whyte) வீழ்த்திய பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு திரும்பினார். பிரிட்டனைச் சேர்ந்த டைசன் ஃபியூரி இரண்டு முறை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும், பிற போட்டிகளில் 34 முறை வெற்றிகளையும் குவித்தவர்.







