தமிழ்நாட்டு பெண்களிடம் 9,600 டன் தங்கமா..! அம்மாடியோவ்…

உலகின் தங்கத்தில் 11% இந்தியப் பெண்கள் வசம்..!!

டெல்லி, டிச.31; உலகின் தங்கத்தில் 11 விழுக்காடு இந்தியப் பெண்களிடம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக பெண்கள் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக உள்ளனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் விற்பனை மட்டும் நம் நாட்டில் குறைவதில்லை.

தங்க மோகம்; காரணம் என்ன?

தங்கத்தின் மீதான அலாதியான மோகத்திற்கு என்ன காரணமென்று அலசினால், மூன்று காரணங்கள் கண் முன் வந்து நிற்கின்றன.

முதலாவது ஆசை, இரண்டாவது கௌரவம், மூன்றாவது வருங்கால சேமிப்பிற்கான சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுவது. அதுமட்டுமின்றி தங்கம் அவசரத் தேவைக்கு அடமானம் வைத்து பணமாக பெற்றுக்கொள்ள உதவுகிறது. இதனால் தான் இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக காணப்படுகிறது.

இதுபோன்ற சூழலில், உலக தங்க கவுன்சில் வெளியிட்டிருக்கும் தகவல் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

இந்தியாவில் 11% தங்கம்..!

உலகின் தங்கத்தில் சுமார் 11 விழுக்காடு இந்தியப் பெண்களிடம் இருப்பதாக, அந்த அமைப்பு கூறுகிறது. உலகின் முதல் 5 நாடுகளின் தங்கத்தைவிட இது அதிகமாகும்.
இந்தியப் பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்திருப்பதாக அதன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மற்ற நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இது அதிகமாகும்.

அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷ்யா 1,900 டன் தங்கம் வைத்திருக்கின்றன. அமெரிக்காவை விட மும்மடங்கு தங்கம் இந்தியாவில் உள்ளது.

தமிழ்நாட்டு பெண்களிடம் 9,600 டன் தங்கம்..!

இந்தியாவில் இருக்கும் 24,000 டன் தங்கத்தில் 40 விழுக்காடு, அதாவது 9,600 டன் தங்கம் தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது. அதில் தமிழ்நாட்டுப் பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மணமான பெண்கள் 500 கிராம், மணமாகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரையிலும் தங்கம் வைத்திருக்கலாம் என்றும், உலக தங்க கவுன்சில் கூறியிருக்கிறது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x