சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் ரோகித், கோலி?
3 முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பில்லை எனத் தகவல்

மும்பை, ஜன.9 ; ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஆனாலும், இந்த வார இறுதியில் தேர்வுக்குழுவினர் கூடும் போது, 50 ஓவர் வடிவத்தில் அவர்களது எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய கே.எல். ராகுல், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் பேசப்படுகிறது.







