ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை; பார்சிலோனா சாம்பியன்
இறுதிப்போட்டியில் ரியல் மேட்ரிட்டை பந்தாடி வாகை சூடியது

ஜெத்தா, ஜன.13; ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மேட்ரிட்டை வீழ்த்தி பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. சௌதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், பார்சிலோனாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. ரஃபின்ஹா இரண்டு கோல்களும், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, அலெஜான்ட்ரோ பால்டே மற்றும் லமைன் யமால் தலா ஒரு கோலும் அடித்தனர். ரியல் மேட்ரிட் அணிக்கான கோல்களை கிலியன் எம்பாப்பே மற்றும் ரோட்ரிகோ ஆகியோர் அடித்தனர்.







