டொனால்டு ட்ரம்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்
ஒருமுறை தோற்றவரை நோக்கி நாடு சாய்ந்துள்ளதாக அதிருப்தி

வாஷிங்டன், ஜன.19; அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு எதிராக தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்தினர். பருவநிலை மாற்றம், குடியேற்றம் மற்றும் பெண்களின் உரிமைகள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தப்பட்டது. அதிபர் தேர்தலில் தங்கள் நாடு வாக்களித்த விதம் தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று ஒரு பெண் குறிப்பிட்டார். ஏற்கனவே ஒருமுறை தேர்தலில் தோற்ற ஒருவரை நோக்கி அமெரிக்கா சாய்ந்திருப்பதாகவும் அந்தப்பெண் கவலை தெரிவித்தார்.



