இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்
15 மாதங்களாக நீடித்துவரும் சண்டை முடிவுக்கு வருகிறது

தோகா, ஜன.16; இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, காஸாவில் சண்டை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 மாதங்களாக நீடித்துவரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், தோகாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இருதரப்பும் முழுமையான நம்பிக்கையுடன் செயல்படுவதைப் பொறுத்துத்தான் ஒப்பந்தம் பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.







