குடியரசு தினவிழா நாளை கோலாகல கொண்டாட்டம்
பிரமாண்ட அணிவகுப்பு, பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

டெல்லி, ஜன.25; குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவிருப்பதை ஒட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்தவ்யா பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை பறக்கவிடுகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, ராணுவ வலிமை மற்றும் நாட்டின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. குடியரசு தின விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக வந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாண்டோ, பிரதமர் மோடியை இன்று சந்தித்து இருதரப்பு உறவு குறித்துப் பேசினார்.



