டெஸ்ட்டில் 10,000 ரன்களை எட்டினார் ஸ்டீவன் ஸ்மித்
அதிவேகமாக மைல்கல்லை எட்டிய 2ஆவது வீரர் என்ற பெருமை

காலே, ஜன.29; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டிய எலைட் கிளப்பில் இணைந்துள்ளார்.
நட்சத்திர வீரரான ஸ்மித், தனது சொந்த மைதானமான சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக மைல்கல்லைத் தவறவிட்டு 9,999 ரன்களை எட்டியிருந்தார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ‘மைல்கல்’

அதன் தொடர்ச்சியாக, தற்போது காலேவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரி்க்கெட்டில் 10,000 ரன்களை தொட்டு எலைட் கிளப்பில் சேர்ந்துள்ளார்.
இதற்கு முன்னர் சிட்னி மைதானத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டியிருந்தனர். 1993இல் ஆலன் பார்டரும், 2003இல் ஸ்டீவ் வாஹும் இந்த மைல்கல்லை எட்டினர்.
ஸ்மித்துக்கு முன்னர் மஹிளா ஜெயவர்த்தனே மட்டுமே 9,999 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். பிரையன் லாரா 9,990 ரன்களில் இரண்டு முறை ஆட்டமிழந்தார்.
10,000 ரன்களை எட்டிய 4ஆவது ஆஸி.,வீரர்

10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ள ஸ்டீவன் ஸ்மித், அந்த மைல்கல்லை எட்டிய நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இவர்களைத் தவிர்த்து மற்றொரு ஆஸ்திரேலிய வீரர், ரிக்கி பாண்டிங் ஆவார்.
ஸ்மித்தைப் பொறுத்தவரையில் தனது 115 டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதே எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை எட்டிய இலங்கை வீரர் குமார் சங்கக்கராவின் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார். பிரையன் லாரா 111 டெஸ்ட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
வேகமாக 10,000 ரன்களை எட்டிய 2ஆவது வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெயரை ஸ்டீவன் ஸ்மித்தும் குமார் சங்கக்கராவும் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் லாரா முதலிடத்தில் உள்ளார்.
சராசரியைப் பொறுத்தமட்டில், 58.72 என்ற சராசரியுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 55.87 என்ற சராசரியுடன் ஸ்டீவன் ஸ்மித் நான்காவது இடத்திலும் உள்ளனர்.







