“ஆதில் ரஷித் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்”
இங்கிலாந்து வீரருக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் புகழாரம்

ராஜ்கோட், ஜன.29; ராஜ்கோட்டில் நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித்தின் அசாத்தியமான பந்துவீச்சால் இந்தியாவின் வெற்றி பறிபோனதாக கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்கள் எடுக்க அனுமதித்துவிட்டதாக சூர்யகுமார் குறிப்பிட்டார்.
“இந்தியாவின் வெற்றியை தட்டிப்பறித்தவர்”

சேஸிங்கில் ஹர்திக் பாண்ட்யாவும் அக்சர் படேலும் பேட்டிங் செய்தபோது ஆட்டம் தங்கள் கைகளில் இருந்ததாகவும். ஆனால், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் சிறப்பாக பந்துவீசி இந்தியாவின் வெற்றியை தட்டிப்பறித்துவிட்டதாகவும் சூர்யகுமார் கூறினார். ஆதில் ரஷித் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்றும் சூர்யகுமார் பாராட்டினார்.







