ட்ரம்ப் மிரட்டல்; ஒன்றிணையும் ஐரோப்பிய ஒன்றியம்
எதிர்வினையாற்ற பிரான்ஸ், போலந்து தலைவர்கள் உறுதி

பிரிட்டன், பிப்.03; டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் தங்களை ஒன்றிணைத்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூறியுள்ளனர். “ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும்” என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்திய அறிக்கைகள் ஐரோப்பாவை வலுவாகவும் ஒன்றிணையவும் தூண்டுகிறது என்றும் அவர் கூறினார். “தேவையற்ற இந்த முட்டாள்தனமான வரிப் போரை தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.



