பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவு
அதிபர் டொனால்டு ட்ரம்பின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு

வாஷிங்டன், ஜன.22; அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையில் குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது உலகெங்கிலும் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து கல்வி பயிலச் சென்றுள்ள மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களையும் கடுமையாக பாதிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. “அதிபர் ட்ரம்ப் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் பரவாயில்லை, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாக இருக்கும், என்ன விலை கொடுத்தாவது அதனைப் பாதுகாக்க நாங்கள் போராடுவோம்” என்று இந்திய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர் கூறினார்.



