2ஆவது டெஸ்ட்; ஆஸி., 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன், ஸ்டீவன் ஸ்மித் தொடர் நாயகன்

காலே, பிப்.09; காலேவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 257 ரன்களும், ஆஸ்திரேலியா 414 ரன்களும் எடுத்தன.

157 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய இலங்கை அணி மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு சிரமம் வைக்காத இலங்கை அணி

நான்காவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, மேலும் 20 ரன்கள் சேர்த்து 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் 75 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன்; ஸ்டீவன் ஸ்மித் தொடர் நாயகன்

அத்துடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வசப்படுத்தியது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் சதமடித்த அலெக்ஸ் கேரிக்கு ஆட்டநாயகன் விருதும், தொடரில் மொத்தம் 272 ரன்கள் குவித்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x