லாஸ் ஏஞ்சலஸில் வேகமாகப் பரவுகிறது காட்டுத்தீ
ஹாலிவுட்டில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலஸ், ஜன.9 ; அமெரிக்காவில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத்தீ பரவியுள்ளதால், ஹாலிவுட் பகுதியில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சலஸில் கடந்த சில நாட்களாக எரிந்துவரும் காட்டுத்தீ புதிய பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ஹாலிவுட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் தீ எரிவதால், அங்கு வசிப்போரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் குடியிருப்பவர்களை உடனடியாக வெளியேறும்படி தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஹாலிவுட் பகுதி மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



