உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி
விளாதிமிர் புதினுடன் பேசுவேன்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன், பிப்.13; உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக தானும் புதினும் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசியதாக ட்ரம்ப் கூறியுள்ளார். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று புதின் விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார். புதினுடன் நடத்திய பேச்சுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசியதாக ட்ரம்ப் கூறினார். ஆனால், போரை முடிவுக்கு கொண்டுவர புதினுடன் அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்குமா என்பது பற்றி ட்ரம்ப் எதுவும் கூறவில்லை.