கவனம் ஈர்க்கும் தேவரா டிரைலர்!

தெலுங்கு சினிமா உலகத்தின் டாப் ஸ்டார்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வரும் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில், சைப் அலிகான், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியானது. கேஜிஎஃப், சலார் படங்களைப் போன்ற மேக்கிங் இருப்பதாகத் தெரிகிறது. கேஜிஎஃப்பில் பிரகாஷ் ராஜ் குரலில் கதை கூறுவதைப் போன்று இதிலும் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் முக்கிய வில்லனாக இருக்கிறார். பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள் உள்ள இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.
கொராட்டாலா சிவா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ஆச்சார்யா. அதன் பிறகு சிவா இயக்கியுள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. அனிருத் இசையில், படத்தின் டிரைலர் இசை பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளது.







