சோகமான தருணத்தில் வியட்நாம் பயணம் ஏன்?
ராகுலுக்கு பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா கேள்வி

கொல்கத்தா, ஜன. 8 ; மன்மோகன் சிங் மறைந்து நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில், ராகுல் காந்தி வியட்நாம் சென்றது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி வினவியுள்ளார். ராகுலின் வியட்நாம் பயண விவகாரம், அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சர்மிஷ்தா இவ்வாறு வினவியுள்ளார். “ஒரு சாதாரண குடிமகன் என்ற முறையில், இந்தக் கேள்வியை கேட்க விரும்புவதாகவும் சர்மிஷ்தா தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியால் காத்திருக்க முடியாதா என்றும் சர்மிஷ்தா கேட்டுள்ளார்.







