“போர்நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பேச மாட்டோம்”
டிரம்பின் யோசனையை ஏற்க ஈரான் திட்டவட்ட மறுப்பு

டெஹ்ரான், ஜூன்.16; இஸ்ரேலிய தாக்குதல்களில் 224 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.
ஈரான் அணுசக்தி திறனை வளர்ப்பதை தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்.13) முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஈரான் மோதல்; உலக நாடுகள் கவலை

ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை இஸ்ரேல் தாக்கி வருகின்றது. ஈரான் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பதிலளித்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவது, உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.
பிரச்னைக்குத் தீர்வுகாண இருதரப்பினரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
“தாக்குதலின்போது போர்நிறுத்தம் குறித்துப் பேச முடியாது”

ஆனால், தாக்குதலின் போது போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் கூறுகிறது.
தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இங்கே பிரச்னை தீவிரத்தை குறைப்பது அல்ல, ஈரான் அணுசக்தி திறனை வளர்ப்பதை தடுப்பது தான்” என்று விளக்கமளித்துள்ளார்.







