அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள்
ராணுவ விமானத்தில் வந்திறங்கியவர்களை வரவேற்க யாரும் வரவில்லை

அமிர்தசரஸ், பிப்.05; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன் வந்த விமானம் அமிர்தசரஸ் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் அவர்கள் பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் சண்டிகரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. டெக்சாஸிலிருந்து அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இன்று மதியம் அமிர்தசரஸ் ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர்களை வரவேற்க குடும்பத்தினர் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.







