Aadhaar Card Renewal – கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் உடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி டிசம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் கார்டில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டை புதுப்பிக்க வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதுவரை பலரும் புதுப்பிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே புதுப்பிக்க கால அவகாசம் இருப்பதால், பல்வேறு பகுதிகளிலும் உள்ள இ சேவை மையங்கள் முன் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆதார் காடை புதுப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து ஆதார் அடையாள அட்டை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் கார்டை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் ஒரு முறை கூட புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அவற்றை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் முன்னதாக தெரிவித்திருந்தது. செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கியிருந்தது. அதன் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்து இருந்தது. இதில் இணைய வழியில் புதுப்பிப்பதற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை, அதே நேரம் நேரடியாக சென்று இ சேவை மையத்தில் ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் இது குறித்து சில விளக்கங்களையும் அளித்துள்ளது.

# எல்லோரும் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை.

# பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கிய கார்டுகளை மட்டுமே புதுப்பிக்க வேண்டும்.

# ஆதாரை ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் எளிது.

# ஆதாரை புதுப்பிக்க Myaadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆதாரை இலவசமாக புதுப்பிக்கலாம்

# அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் புதுப்பிக்கலாம்.

# ஆன்லைனில் பதிவு செய்தால் 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் கிடைக்கும்.

# பழைய கார்டு செல்லாது என்று அரசு எந்த உத்தரவும் போடவில்லை.

# MyAadhaar portalஇல் புதுப்பிக்க கட்டணம் கிடையாது. இ சேவை மையங்களில் புதுப்பிப்பதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

# முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் இருந்தால் புதுப்பித்தல் அவசியம்.

# ஆதார் ஆதார் கார்டை புதுப்பிக்க அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு பொதுமக்கள் சென்று தங்கள் தகவல்களை புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகு ஆதார் அப்டேட் செய்யப்பட்ட தகவல் அனைவரின் செல்போனுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, புதிய ஆதார் கார்டை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் ஆதாரை அப்டேட் செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x