யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக் கோரிக்கை
மத்திய கல்வி அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: யுஜிசி நெட் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி இருக்கிறார். வரும் ஜனவரி 14-ல் யுஜிசி நெட் தேர்வு நடத்த ஒன்றிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 14 முதல் 16 வரை தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே இதே காரணத்துக்காக சி.ஏ. தேர்வு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.. எனவே யு.ஜி.சி. நெட் தேர்வை 16-ம் தேதிக்கு பிறகு மாற்றி அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.








