‘Goat’ படத்தால் மன உளைச்சல்: நடிகை மீனாட்சி சௌத்ரி
ரசிகர்கள் ட்ரோல் செய்ததால் வேதனை அடைந்ததாக பேட்டி

சென்னை, ஜன.8 ; ‘Goat’ படத்தில் தான் ஏற்றிருந்த ஸ்ரீநிதி கதாபாத்திரத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை மீனாட்சி சௌத்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படத்தில் இளவயது விஜய்க்கு ஜோடியாக ஒரு பாடல் மற்றும் சில காதல் காட்சிகளில் மட்டுமே வந்து போனதால், ரசிகர்கள் தன்னை வசைபாடியதாக, பேட்டி ஒன்றில் மீனாட்சி கூறியிருந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட சிரமப்பட்டதாக மீனாட்சி சௌத்ரி தெரிவித்துள்ளார்.







