இசைஞானி இளையராஜாவிடம் கற்றுக்கொண்டது என்ன?
இசைப்புயல் ரஹ்மான் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய தகவல்

சென்னை, ஜன. 10 ; இளையராஜா இசைத்துறைக்கே மரியாதை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்று ஏ.ஆர். ரஹ்மான் புகழ்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஒரு காலத்தில் பல இசைக் கலைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தபோது, இளையராஜா இந்த கலைக்கே ஒரு மரியாதையை கொண்டு வந்தார் ” என்று குறிப்பிட்டார். அவருடன் பணியாற்றுவதே ஒரு மரியாதையான விஷயம் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சூழல் வந்தது என ரஹ்மான் குறிப்பிட்டார். இசையை தாண்டி அவரிடம் கற்றுக்கொண்டது இதுதான் என்று ரஹ்மான் கூறினார்.







